ஞாயிறு, 8 செப்டம்பர், 2019

பழையன கழிதலும் புதியன புகுதலும்



நேற்றைய பதிவிலிருந்து ... மூன்று விதமான கருத்துகள் வந்தன.
1. நேர்மறை - நிறையப் பாராட்டுகள் பதிவு நம்பிக்கையூட்டுவதாக இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுகோலாக இருக்கிறது.
2. சமூக அக்கறை மற்றும் கவலை - புதிய தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தும் வேலையிழப்புகள் மற்றும் சமூக உளவியல் சிக்கல்கள்.
வேலையிழப்புகள் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகப் பேச வேண்டும்.
3. வசவாளர்கள் - இந்தியப் பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கிறது. இங்கே அடிப்படை வசதிகளே இல்லை இதில் புதிய தொழில்நுட்பங்கள் என்ன செய்யப் போகின்றன. பதிவு போலியான நம்பிக்கையை ஊட்டுகிறது.

பதிவு இந்தியப் பொருளாதாரத்தைப் பற்றியோ (அல்லது) புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவை முன்னேற்றும் என்றோ எழுதப்படவில்லை.

பொறியியல் துறையைப் பற்றி ஒரு நம்பிக்கையின்மை ஊகச்செய்தியாக பரப்பப்படுகிறது, குறிப்பாகத் தகவல் தொழில்நுட்ப துறை வீழ்ந்துக்கொண்டிருப்தாக அது உண்மையில்லை என்பதை விளங்குவதே முக்கிய நோக்கம்.

இரண்டாவதாக மனித வள மேம்பாடு, இனி வரும் காலங்களில் மூளை சார்ந்த வேலைகள் அதிகரிக்கும். உடல் சார்ந்த திரும்ப, திரும்பச் செய்யப்படும் வேலைகள் முழுவதுமாக ஒழிக்கப்படும்.

இந்த புதிய தொழில்நுட்பங்கள் மனிதவள தேவையிருக்கிற நாடுகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும். மிக முக்கியமாக ஜப்பான், கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற மூப்படையும் சமூகத்தைக் ( Population ageing) கொண்ட நாடுகள்.

அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறை குடியேறி வாரிசுகளின் (3rd / 4th generation immigrants complexities) சிக்கலை எதிர்கொள்ளும் நாடுகளும் மனித வள தேவை ஏற்படும்.
(குடியேறிகளின் மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறையினர் 60 சதவிகிதம் அறிவியல் திறனற்றவர்களாகவும் மற்றும் ஊதாரிகளாகவும் இருப்பது).

இந்த மனிதவள தேவையை இந்தியா சரியாகப் பயன்படுத்த புதிய தொழில்நுட்பங்களில் பயிற்சியும், அறிவும் பெற வேண்டியது அவசியம்.

உலகின் இரண்டாவது மிகப்பெரிய இளைய சமூகத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. ஏறக்குறைய 35 சதவிகிதம் இளையர்கள்.

இந்தியாவும் அதன் பெரு நகரங்களும் மக்கள் தொகை பெருக்கத்தால் திணறிக்கொண்டிருக்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் காலையில் 7 மணிக்கு வேலைக்கு கிளம்புகிறவர்கள் 10..30 அல்லது 11 மணிக்கு தான் அலுவலகம் வந்து சேர முடிகிற அளவுக்கு நெருக்கடி நிலவுகிறது.

பெருகிக்கொண்டிருக்கிற மக்கள் தொகைக்கு ஏற்ப நில மற்றும் நீர் வளங்கள் இந்தியாவில் இல்லை.

இருக்கிற ஒரே தீர்வு மனிதவளத்தை ஏற்றுமதி செய்வது தான். ஒவ்வொரு ஆண்டும் 1 கோடி பேர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். 2030 -க்குள் 10 கோடி பேர் இந்தியாவை விட்டு கட்டாயம் வெளியேறி ஆக வேண்டும். இல்லையென்றால் நில மற்றும் நீர் வள பற்றாக்குறையால் மிகபெரிய சமூக அவலங்கள் நடந்தேறும்.


புதிய தொழில்நுட்பங்களை இளையர்களுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம், இந்தியாவில் இருக்கும் அதிகமான மனிதவளத்தை மனிதவள தேவையிருக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

அரசுகள் மனிதவள ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதன் மூலம் மட்டுமே... எதிர்கால சிக்கலைத் தீர்க்க முடியும்!.

அன்புடன்
பட்டுக்கோட்டை பாரி.அரசு

சனி, 7 செப்டம்பர், 2019

மாற்றங்களுக்கு தயாராகுங்கள்...


தகவல் தொழில்நுட்ப துறை (IT) வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக ஊகச்செய்திகள் வாயிலாக நம்பிக்கையின்மை பரப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் தகவல் தொழில்நுட்ப துறை கடந்த 20 ஆண்டுகளில் குழந்தையாய் தவழ்ந்து, நடைபயின்று, வளர்ந்து ஓர் இளவரசியாய் ஆட்சி அதிகாரம் செய்துகொண்டிருக்கிறது.

ஒவ்வொரு துறைக்கும் சில ஆண்டுகள் மாற்றங்களுக்கான தேக்க நிலை ஏற்படும். இந்த இளவரசி ஓர் பேரரசியாய் இன்னும் சில ஆண்டுகளில் மாற்றம் காணப்போகிறாள். அவளுக்கு உறுதுணையாய் பல்வேறு தொழில்நுட்பங்கள் படை நடத்தப் போகின்றன.
1. திரள் கணிமை (Cloud Computing)
2. மீதரவு & தரவு பகுப்பாய்வு ( Bigdata & Data Analysis)
3. இணையக்கருவிகள் ( IOT)
4. செயற்கை நுழைபுலன் ( Artificial intelligence)
5. தானியக்கம் ( Automation)
6. கானல் மெய்மை ( Virtual Reality)


இன்னும் பல புதிய தொழில்நுட்பங்கள் ஆய்வு மற்றும் வளர்ச்சி பிரிவிலிருந்து பயன்பாட்டுக்கு வர இருக்கின்றன.

தகவல் தொழில்நுட்ப பேரரசியின் காலடியில் வீழாத துறைகளே இருக்கப் போவதில்லை. 2020 லிருத்து 2050 வரை - அடுத்த 30 ஆண்டுகள் தகவல் தொழில்நுட்பம் தான் ஒரு தலைமுறைக்கு பேரராட்சி செய்யப் போகிறது.

எடுத்துக்காட்டாக மருத்துவத் துறை எப்படியான மாற்றங்களைச் சந்திக்கும் என்று பார்க்கலாம், இவற்றில் சிலவை உடனடியாக நடக்கலாம் அல்லது வேறு தொழில்நுட்பங்களுடன் வேறு ஒரு பரிணாமத்தில் வரலாம்...

இனி நேரடியாக மனித மருத்துவரை அணுக வேண்டிய தேவையிருக்காது. ஒரு கானல் மெய்மை உதவியாளரை ( virtual reality assistance) அணுகினால் அவர் உங்களுடைய நோயின் ( disease) அல்லது ஒழுங்கற்ற தன்மையின் (disorder) தகவல்களைத் திரட்டி  அனுப்புவார்.( செயற்கை நுழைபுலன் வாயிலாக இயங்கும் ஆய்வகங்கள் வாயிலாக இந்த தகவல்களை நீங்கள் பெற வழிவகை இருக்கும் ).

உங்களுடைய தகவலைத் தரவு மாற்றம் செய்து பல பில்லியன் மருத்துவ தகவல் அறிக்கைகளுடன் ஒப்பீடு செய்யப்படும். இதற்காக மீதரவு மற்றும் தகவல் பகுப்பாய்வு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.

மருத்துவ நிறுவனங்கள் நோயாளிகளின் தகவலைச் சேமிப்பது மிக முக்கியமாக இருக்கும். நோயாளிகளின் தகவலைப் பொதுவெளியில் பயன்படுத்த மருத்துவ நிறுவனங்கள் காசு தர வேண்டியிருக்கும். மிக அதிகமான நோயாளிகளின் தகவலைச் சேமித்து வைத்திருக்கும் நிறுவனங்கள் மருத்துவத்துறையில் அதிகாரம் செய்வார்கள்.

தானியக்க தொழில்நுட்பமும் , செயற்கை நுழைபுலனும் இணைந்து வடிகட்டிய தரவுகள் ஒரு மருத்துவரைச் சென்றடையும். இங்கே மருத்துவர் இயல்பாகத் தகவல் தொழில்நுட்ப நுணுக்கங்கள் அறிந்தவராக இருக்க வேண்டும் அப்பொழுது தான் தகவல் வடிகட்டிகளைச் (data filters) சரிசெய்யவும், தரவு பகுப்பாய்வும் செய்ய முடியும்.

இறுதியாக மருத்துவர் அவருடைய சிகிச்சைப் பரிந்துரைகளைக் கொடுக்கிறார். அது அப்படியே ஈயடிச்சான் காப்பியாக பழைய சிகிச்சை முறையாக இருக்கலாம். ஒரு நுழைபுலன் மிகுந்த மருத்துவர் புதிய சிகிச்சைப் பரிந்துரைகளை இணைத்திருக்கலாம். இவை அனைத்தும் புதிய மருத்துவ தகவல் அறிக்கையாகச் சேமிக்கப்படும்.

இப்படி ஒவ்வொரு துறையும் தகவல்களாலும், தரவுகளாலும் மாற்றமடையப் போகின்றன.
இனிவரும் காலம்... தகவல் தொழில்நுட்ப பேரரசி இட்டதே கட்டளை, அதுவே சாசனம் ...!

அன்புடன்
பட்டுக்கோட்டை பாரி.அரசு

திங்கள், 3 ஜூன், 2019

ஆண்மய்யச் சிந்தனையாளர்களின் அவசர கூட்டம்...!

வலைப்பதிவுலகில் ஈராயிரத்து சொச்சம் ஆண் பதிவர்கள் இருந்தாலும், 50 முதல் 60 பெண் பதிவர்கள் வூடுக்கட்டி அடிப்பதாலும்... சேதாரம் அதிகமாக இருப்பதாலும்... இனிமேலும் பொறுக்க இயலாது என்கிற முடிவில் தற்காத்துக்கொள்ளல்தகவமைத்துக்கொள்ளல் தொடர்பாக ஆண்மய்யச்சிந்தனையாளர்கள் அவசரமாக ரகசிய கூட்டம் கூட்டுவதென முடிவெடுத்து. நேற்றிரவு ரகசிய சந்திப்பை நடத்தினார்கள்.

வலையுலக சுனாமி யோனி கொண்டான் தலைமையேற்க... சிறப்பு விருந்தினராக அண்ணாச்சி கலந்துகொண்டார்எதிரணியிலிருந்து பெண்ணீயப்போர்வாள் திருமதி. செல்வி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றினார்கள்.

பெரும் எண்ணிக்கையில் வருகை தந்திருந்த சிந்தனையாளர்கள்... தலையில் துண்டுடன் வந்திருந்தனர். விசாரித்ததில் வெளியே தலைகாட்டினால் தலை தப்பாது என்று பேசிக்கொண்டனர்! திருமணமானவர்களே பெருமளவில் வந்திருந்தது மிகவும் கவனிக்கதக்கதாகயிருந்தது!.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அனைவரும் "ரகசியம் காப்போம்" என்கிற உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

யோனிகொண்டான் தனது தலைமையுரையைத் தொடங்கியவுடன் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் உரையை நிகழ்த்தாமலேயே இருக்கையில் அமர்ந்தார்! விசாரித்ததில் எதிரணியினர் கலகத்திற்குக் கையூட்டு அளித்திருக்கலாம் என்று கவலை தெரிவித்தனர்! ஒரு குழுவினர் தலைவரே எதிரணியின் உளவாளி என்று குற்றஞ்சாட்டினர்!
Related Posts with Thumbnails