செவ்வாய், 21 ஆகஸ்ட், 2007

சிங்கையில் மட்டும் எப்படி முடிகிறது, தமிழ்நாட்டில் ஏன் முடியல...?

சிலமாதங்களுக்கு முன்னாடி என்னுடைய நண்பர் ஓருவர் (அவர் பாடகர், அதோட பாடல் பயிற்சி வகுப்புகள் வேறு போயிட்டிருக்கிறார்) சிலோன் ரோடு விநாயகர் கோயிலில் ஓரு இசை நிகழ்ச்சி இருக்கு போகணும் வருகிறாயா? என்று கேட்டார்.

நான் வரவில்லை என்றேன்

ஏன்? என்று கேட்டார்

இவனுக தமிழ்நாட்டுல இருந்து வந்து புரியாம கர்நாடக சங்கீதம் என்கிற பேரில் எதையாவது பாடுவாய்ங்க நீங்க உட்கார்ந்து தலையாட்டுவீர்கள், நான் அங்கன எதுக்கு என்றேன்.

இல்ல, கட்டாயம் நீ வர வேண்டும் உனக்கு ஓரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்றார்

ஓரு வழியா கட்டாயபடுத்தி என்னை கூட்டி சென்றார், நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி...

எல்லா நிகழ்வுகளும் முழுக்க, முழுக்க தமிழ் இசை பாடல்கள் பாடப்பட்டது. திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று அசத்தினார்கள்.

மிக முக்கியமான செய்தி யாரெல்லாம் தங்களுக்கு கர்நாடக சங்கீதம் தவிர வேறு எதுவும் பாட வராது என்கிற மாதிரி தமிழகத்தில் மேடை தோறும் கர்நாடக சங்கீதம் பாடுகிற பாடகர்கள்... இங்கே தமிழ் இசை பாடல்கள் பாடிக்கொண்டிருந்தனர். அனைவருமே தமிழகத்திலிருந்து வந்த பாடகர்கள்.

நிகழ்ச்சியின் முடிவில் சில விசாரணைகளை மேற்க்கொண்ட போது தான் தெரிந்தது, இந்த கோயிலின் நிர்வாகம் முழுக்க, முழுக்க ஈழத்தமிழர்களால் நடத்தப்படுகிறது.

பிறகு அவர்களிடம் உரையாடிய போது, அவர்கள் சொன்ன தகவல்...

நாம் பணம் கொடுக்கிறோம், நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம். இங்கே வேறெந்த சிக்கலுமில்லை என்றனர்.

அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே...!

சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.

16 கருத்துகள்:

நந்தா சொன்னது…

தலைவரே சீக்கிரம் அந்த லிஸ்டைப் போடுங்க.

madukkooran சொன்னது…

கொளுத்திப் போட்டிருக்கிறீர்கள். எங்கெங்கே வெடிக்கப் போகிறதோ ?
'டோண்டு' worry

சிவபாலன் சொன்னது…

Excellent Post!

//அப்போ தமிழ் நாட்டு தமிழனும் பணம் தானய்யா கொடுக்கிறான், கோயில் திருவிழாவில் இருந்து, கச்சேரி மேடை வரை இவர்கள் பாடுகிற புரியாத பாடல்களுக்கு தலையாட்டிக்கிட்டே திரியுறானுகளே... //

Good Question!

கோவி.கண்ணன் சொன்னது…

//சிங்கையில் டாலருக்கு தமிழில் பாடும் பாடகர்கள், தமிழ்நாட்டில் ரூபாய் நோட்டுக்கு தமிழிலில் பாட மறுப்பதேன்?

இல்லை

தமிழ்நாட்டு தமிழன் மானம் கெட்டு அலைகிறானா?

விரைவில் பாடகர்களின் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி நிரலை வெளியிடுகிறேன்.//

என்னங்க சொல்றிங்க ?

தியாகராஜரும் மற்றும் மும்மூர்த்திகள் அவதரித்த தமிழ்மண்ணில் தமிழ்பாட்டு எப்படி பாட முடியும் ? அவர்கள் தெலுங்கு கீர்த்தனைகளையும், சமஸ்கிருத கீர்த்தனைகளையும் அல்லவா போற்றினார்கள்.

சிங்கையில் அவர்கள் பிறக்கவில்லையே ? தமிழை எங்கு வேண்டுமானாலும் பாடலாம் ? மகான்கள் அவதரித்த 'தமிழகத்தில் பாடலோமோ ?

:)

வெற்றி சொன்னது…

நல்ல பதிவு. நியாயமான ஆதங்கம்.

சுதாகரன் சொன்னது…

தமிழ்நாடென்றாலும் 'அவா' வோட சபாவுல பாடுறவனெல்லம் எதுக்காக தமிழ்ல பாடணும் அங்க தமிழ் பாட்டு கேட்கதான் வாராங்களா?.

உங்க கருத்துப்படி அவங்க தமிழ் பாட்டு கேட்பதற்காக காசு கொடுப்பதில்லை.

வவ்வால் சொன்னது…

பாரி அரசு,
அதற்கு காரணம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , இங்கேயுள்ளவர்கள் அப்படி பாடினா தானே காசு தராங்க. உங்களை போன்றவர்கள் இங்கேயும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருக்க வேண்டும்.

பாரி.அரசு சொன்னது…

நந்தா வருக!
பாடகர் பட்டியலை போட்டால், நம்ம மக்கள் ஓவ்வொரு பாடகரையும் தனிமனித தாக்குதலில் இறங்கி விடுவார்கள், அதான் நிறுத்தி வைத்துள்ளேன்.

பாரி.அரசு சொன்னது…

வருக மதுக்கூரான்!
எங்கேயும் வெடிக்காது... சில இடங்களில் மட்டும் புகையும் :-))

பாரி.அரசு சொன்னது…

வருக சிவபாலன்!
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

ரவிசங்கர் சொன்னது…

customer-supplier பரிமாணத்தில் இது வரை இதை யோசித்தது இல்லை. !! முக்கியமான விசயத்தைச் சுட்டிக் காட்டி இருக்கிறீர்கள். நன்றி.

ஜெர்மனியில் இருந்து போது ஒரு ஈழத் தமிழர் வீட்டுக்குப் பொங்கலுக்குப் போனபோது தேவாரம் பாடித் தான் இறைவணக்கம் செய்தார். இத்தனைக்கும் அவர் பள்ளி வகுப்பு கூடு முடிக்காதவர். இது போன்ற விசயங்களில் ஈழத்தவர்களுக்கு இருக்கும் தெளிவு, பிடிப்பு நமக்கு இருப்பதில்லை. இனியாவது கற்றுக் கொள்ள வேண்டும்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

பாரிசில் ,ஈழம் தெல்லிப்பழைப் பழைய மாணவர் சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட பம்பாய் ஜெயசிறி
அவர்களின் கச்சேரியில் ஒழுங்கு செய்தவர்கள்; அம்மன் பாடல்கள் (அவர்கள் தெல்லிப்பழை துர்க்கையை குலதெய்வமாகக் கருதுபவர்கள்) அதுவும் தமிழில் பாடவேண்டும் எனக் கேட்டுக்கொண்டபோது சுமார் 2.30 மணி தமிழே பாடினார். அந்த இசை நிகழ்ச்சிக்கு நான் எதிர்பாராவிதமாக வரவேற்புரை ஆற்றினேன்.
2002 அமைதிக்குப் பின் யாழ்ப்பாணம் சென்ற முதல் தென்னிந்தியக் கலைஞர் நித்தியசிறி ;இவர் நல்லூர் கந்தசாமி கோவிலில் தமிழிலே பாடியதாக அவரே பெருமையாகக் கூறினார்.அங்கே கேட்டுக் கொள்ளப்பட்டது.
அடுத்து பாரிஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சஞ்சய் சுப்பிரமணியம் அவர்கள் கச்சேரியில் இன்று உங்களுக்காக பெரும்பகுதி தமிழில் பாடுவார் என அறிவித்த போது; ஒரு பாடல் தவிர ஏனையவை
தமிழில்; தேவாரம்;திருவாசகம்;பிரபந்தம் பாடி அசத்தினார். அவர் பாடிய "ஊரிலே காணியில்லை,உறவு மற்றொருவர் இல்லை எனும் பிரபந்தம் கேட்டு ஒரு பெண் கண்ணீர் விட்டார். உணர்வில் கலந்து ஒன்ற அந்த மொழி புரிந்ததால்... அதனால் நாம் காசு கொடுக்கிறோமா? தேவையானதைக் கேட்கக் கூச்சப்படக் கூடாது. அது நமது உரிமை அவர்கள் கடமை.
நான் தியாகராசரின் கீர்தனைகளுக்கு எதிரி அல்ல. அதையும் மொழி புரியாவிடிலும் உருக்கத்தால்; தெய்வ நாமம் என்பதால் மிகரசிக்கிறேன். ஆனாலும் எம் மொழியிலும் பாடுங்கள்..என அன்பாகக் கேட்கிறோம். இந்த மாற்றம் வர நீங்கள் தான் மனம் வைக்க வேண்டும்.
ஆகவே பக்குவமாக எடுத்துச் சொல்லுங்கள்.

மாசிலா சொன்னது…

நல்ல சிரிப்பு. இதுபோன்ற கலைஞர்களை நினைக்கையில் சிரிப்புதான் மிஞ்சுகிறது.

இவர்களைத்தான் கூலிக்கு மாரடிக்கும் பட்டாளம் என்பதோ?

அவுத்து போட்டு ஆட சொன்னாலும் ஆடுவாங்க. அடுத்த முறை இதை கேட்டு பாருங்க. டாலருக்கு ஆடாத பாம்பே இல்லை இந்த உலகத்தில. ஒரு வேளை இந்தியா நாணயத்தையும் டாலரா மாத்திட்டா எல்லாம் சரியா ஆயிடுமா?

நல்ல பதிவு. நன்றி பாரி.அரசு

ILA(a)இளா சொன்னது…

//நமக்கு தேவையானதை அவர்கள் பாட வேண்டும் என்பதை தெளிவாக சொல்லிவிடுகிறோம்.//

பாரி, ஒரு பெரிய விஷயத்தை எவ்வளவு சுலபமா சொல்லிட்டீங்க. நம்ம ஊர்க்காரங்களும் இதுதான் வேணும்னு சொல்லி இருந்தா திருக்குறள்,தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என்று எல்லாத்தையும் இசையாவே கேட்டு ரசிச்சு இருக்கலாம். நல்ல படிவு/ஆதங்கம். அருமையான சாடல்.
அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு வந்தனம்

ஜெகதீசன் சொன்னது…

நல்ல கேள்வி பாரி.. பதிவுக்கு நன்றி..

திகழ்மிளிர் சொன்னது…

நல்ல கேள்வி
அருமையான பதிவு

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails