வயது ஏற, ஏற தூங்கும் நேரம் குறைந்துகொண்டே வருகிறது.
நேர விழுங்கிகளிடம் தப்பிப் பிழைக்க விழைந்த காலம் போயி... நேரத்தைக் கடத்த
விழைகிற.. .காலத்திற்கு வந்து விட்டோம்... மண்டைக்குள் "தோழர் Jamalan
Tamil பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன காந்தியை மீள் வாசிப்பு செய்யுங்கள்..." மணியடிக்க...!
காந்தி மண்டையைக்
கனக்கச் செய்தார்...! காந்தியின் வாயிலாக லெனின் புரட்சி சாத்தியமா...!? எனக்குள் குறு,குறுத்துக் கொண்டிருக்கிற... சமூக, அரசியல் தேடல்...! காந்தியும், லெனினும்
காத்திருப்பு பட்டியலில்...!
Charles Dickens சரணடையலாம்
என்றால்...! விமர்சனங்கள் என்றாலே வெம்புகிற மனதிடம்... ஆற்றுப்படுத்தலின்றி
அல்லல் உறுகிறது...!
தோழர் ஒருவர்
கொடுத்த ஷேக்ஸ்பியரின் ரோமியோ மற்றும் ஜீலியட் கண்ணில்பட்டது. நமது
ஆங்கிலத்திற்கு... இரண்டு பொழிப்புரை மற்றும் விளக்கவுரை துணையுடன்... வாசிக்கத்
தொடங்கியாயிற்று...!
முன்பே இந்த
கதையின் சுருக்கம் தெரியுமென்பதால்... ஒரு துயரமான காதல் கதை என்கிற அளவில் உள்ள
புரிதலில் தொடங்கினேன்...!
ஷேக்ஸ்பியரின்
தத்துவ விளாசல்களில்... சுருண்டு விட்டேன். தேங்கி, வழிந்து, ஓடிக்கொண்டிருக்கிறேன்...
!
ஏனிந்த புலவர்கள்
தலைவிகளை வைத்து அறத்தையும், தத்துவத்தைப்
பேசுகிறார்கள்...!?
ஜீலியட்...
ரோமியோவை காதல் வெப்பத்தில் கொதிகலனில் வைக்கிறாள்.. அவன் உருகி நிற்கிற
நிலையில்... தத்துவ சம்மட்டிகளால் சடாரென்று அடிக்கிறாள்...!
தமிழின்
அகப்பாடல்களிலும்... இந்த போக்கை காணலாம்...! வழக்கறிஞர் Prabhu Rajadurai அய்யாவின் நிகழ்வுடன் தொடர்பு படுத்தும் அகப்பாடல் பதிவுகள்... ஒரு வாசிப்பனுபவம்...!
தலைவிகளின்
தத்துவ தாக்கங்களை முன் வைத்து கிளியோபாட்ரா, சீசர் உறவு, கலிகுல்லாவின
காதல் மற்றும் ஜமாலின் நீலப்படங்களின் உடல் அரசியலையும் ஒரு மீள் வாசிப்பு செய்ய
வேண்டும்.
‘Tis but thy name that is my enemy:
Thou art thyself, though not a Montague.
What’s Montague? It is nor hand nor foot
Nor arm nor face nor any other part
Belonging to a man. O be some other name.
What’s in a name? That which we call a rose
By any other name would smell as sweet;
So Romeo would, were he not Romeo call’d,
Retain that dear perfection which he owes
Without that title. Romeo, doff thy name,
And for that name, which is no part of thee,
Take all myself.
உன்னுடைய பெயரில்
என்ன இருக்கிறது...!? ரோஜா என்பதை ..
வேறாக அழைத்தால் மணக்காதா...!? ஓடையாய், பேருவியாய், ஓடிக்கலந்து பெரு வெளியாய்.. நின்று.. அங்கே ரோமியோவை
தத்துவ வெளியில் மிதக்க விடுகிறாள்...!
இந்த ஒரு பத்தியை
எடுத்துக்கொண்டு... இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் பிறப்பால் பேசப்படுகிற ஏற்ற
தாழ்வுகளைப் பற்றி அலச நிறைய இருக்கிறது.
எனக்கு வேறொன்று
உதித்தது...! ஜீலியட் பெயரில் என்ன இருக்கிறது... என்பதன் நீட்சியாக எது உனது
அடையாளம் (ஐடென்டிட்டி) பற்றிப் பேசுகிறாள்...!
எனது மூளை உடனே...
பொருளின் தனித்துவமான அடையாளம் (unique object identity) என்கிற கணினி சிந்தனைக்குள் செல்கிறது.
எது எனது
அடையாளம்...!?
அடையாள சிக்கலை
முன்வைத்து அரிஸ்டாட்டில் மற்றும் பிளாட்டோ உடன் முரண்பட்ட உரையாடலை வாசித்த
ஞாபகம்...!
பர,பர வென்று மேலை, கீழை நாகரிகங்களிலிருந்து... பூமிப் பந்தின் கிழக்கிருந்து,
மேற்காக.. வடக்கிலிருந்து தெற்காக எழுந்த
தத்துவ கூறுகளில்... அடையாள சிக்கலை பேசிய
தத்துவங்களைப் பற்றிய தேடல் பற்றிக்கொண்டது...! அடுத்த சில ஆண்டுகளுக்கான நூல்கள்
பட்டியல் தயாரானது...! அதில் உடனடியாக நான்கைந்து புத்தங்களுடன் வீட்டிற்கு
வந்திறக்கினேன்...!
அப்பன்காரன்...
ஏதோ புத்தகத்துடன் வந்திருப்பதைப் பார்த்து என்னுடைய மகளுக்கு ஐயம்...! , ஏற்கனவே இந்த அடுக்கில் இருக்கிற புத்தங்களைப்
பார்த்து அடிக்கடி கேட்கிற வினா தான்...! நீங்க படிச்சு நாங்க பார்த்ததில்லை...!
"சும்மா பெருமைக்கு அடிக்கி வைத்திருக்கிறீர்களா...!?"
நான்
வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்...! ஆர்வமாக வந்தாள்... புத்தகங்களைப்
புரட்டிப்பார்த்தாள்... சிரித்துக்கொண்டே சென்று... அவள் அம்மாவிடம் ஏதோ
சொல்லிவிட்டுச் சென்றாள்...!
ஏய்...
என்னடி
சொன்னா...!?
ஒன்றுமில்லே...!
சிரிச்சிட்டே
போனா...
என்ன சொன்னா...
அதான்
ஒன்னுமில்லேன்றேன்ல...
அதை தான்
சொல்லு...
அது...
"உனக்குக்
கிறுக்கு புடிச்சிருக்கான்னு கேட்கிறா...!?"
அவ கேட்டாளா...!?
அவள வைச்சு...
நீ...
கேட்கிறாயா...!
கழுத்தைத்
திருப்பி... எள்ளலுடன், ஒரு மந்தகாச
புன்னகையுடன் நகர்கிறார்... எந்தன் தலைவி...!
ஜீலியட்
மண்டைக்குள் அறைகிறாள்...
"Romeo, doff thy name,